அதிமுக மாவட்ட அலுவலக சாவியை ஒப்படைத்தது ஏன்?- விஜயபாஸ்கர் விளக்கம்
அதிமுக மாவட்ட அலுவலக சாவி ஒப்படைப்பு ஏன் என எம்எல்ஏ விஜயபாஸ்கர் கொடுத்த விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டார். அதிமுகவில் தொடர்வதா? மாற்றுக்கட்சிக்கு செல்வதா? என்பது குறித்து புதுக்கோட்டை, பெரியார் நகரில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார். நேற்று மாவட்ட அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ் தரப்பிடம் ஒப்படைந்திருந்தார். இந்நிலையில் அவர் அதிமுகவில் இருந்து விலகுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், “பரபரப்பான செய்திகள் எதுவும் என்னிடம் இல்லை. அதிமுக அலுவலக சாவி பெருந்தன்மையுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது... 26 வயதில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன்... 5 முறை போட்டியிட்டு ஐந்து முறையும் மகத்தான வெற்றியை பெற்றுள்ளேன்.. எப்போதும் கட்சி நிர்வாகிகளை நட்பு உறவாக பழகி வருகிறேன்” என்றார். அதிமுகவில் தொடர்கிறீர்களா என்ற கேள்விக்கு மீண்டும் பதிலளிக்காமல் புன்னகைத்து சென்றார் விஜயபாஸ்கர். இதற்கு முன்பு இதே கேள்விக்கு புன்னகைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.