×

“2 கோடி தொண்டர்கள் இருப்பதாக கூறும் ஈபிஎஸ் வெறும் 80 லட்சம் வாக்குகள் மட்டுமே வாங்கியுள்ளார்”- வைத்திலிங்கம்

 

எடப்பாடி பழனிசாமி 2 கோடி தொண்டர்கள் இருப்பதாக கூறுகிறார் , ஆனால் வாங்கியதோ 80 லட்சம் வாக்குகள் தான் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் சட்டமன்ற உறுப்பினர் பொது நிதியில் இருந்து ஒரு கோடியே 36 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நூலக கட்டிடத்திற்க்கான பூமி பூஜை நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எடப்பாடி 2 கோடி தொண்டர்கள் இருப்பதாக கூறி வருகிறார் வாக்கு கிடைத்ததோ 80 லட்சம் தான்.

உண்மையான தொண்டர்கள் மற்றும் சிதறி கிடப்பவர்கள் என 1.5 கோடிக்கு மேல் உள்ளனர். அத்தனை தொண்டர்களில் 99 சதவீதம் பேர் இந்த அதிமுக இணைய வேண்டும் என நினைக்கிறார்கள். அவர்களுடைய எண்ணம் கூடிய சீக்கிரம் நிறைவேறும். அதிமுகவுடன் யார் யார் கூட்டணி வைத்து இருக்கிறார்களோ, பிரிந்து கிடப்பார்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அந்த அதிமுகவுடன் யார் கூட்டணி வைக்கிறார்களோ அந்த கூட்டணி வெற்றி பெறும்” என்றார்.