×

நான் 2001-லேயே அமைச்சர், எடப்பாடி 2011-ல் தான் அமைச்சர், அவர் எனக்கு ஜூனியர்- வைத்திலிங்கம்

 

அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டு இருப்பது சாதாரண நிகழ்வு என ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர். வைத்திலிங்கம் பேட்டியளித்துள்ளார். 


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், ஒரத்தநாடு சட்டமன்ற அதிமுக உறுப்பினருமான வைத்திலிங்கம், “அமமுகவும், அதிமுகவும் இணைந்து செயல்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். என்னைவிட கட்சியின் சீனாயாரிட்டியில் எடப்பாடி பழனிசாமி ஜூனியர். நான் 2001-லேயே அமைச்சர், எடப்பாடி 2011-ல் தான் அமைச்சர். எடப்பாடி பழனிசாமி  எடப்பாடி தொகுதியில் 1984ல் ஜனதா தளத்திற்கு வேலை பார்த்தவர்.  1986ல் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கு நின்று தோல்வியடைந்தவர்.  கடந்தகால மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் நான் தஞ்சை மாவட்டத்திற்காக ஜெயலலிதாவிடம் கேட்ட அனைத்து வளர்ச்சி திட்டங்களுக்கு அதாவது கால்நடை மருத்துவக் கல்லூரி, விவசாய கல்லூரி, பொறியியல் கல்லூரி என அனைத்து முன்னுரிமை அளித்து செயல்படுத்தி தந்தவர் ஜெயலலிதா 

எடப்பாடி பழனிசாமிக்கு திராவிட வரலாறு தெரியாது, அண்ணா திமுக வரலாறு தெரியாது. ஓரே மேடையில் தமிழ்நாடு, இந்திய, உலக அரசியல் பற்றி  விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா? நாங்கள் தான் உண்மையான அதிமுக என செயல்பட்டு வருகிறோம். நீதிமன்ற தீர்ப்பு ஜூன் மாதம் வரும். அந்த தீர்ப்பின் நிலைமைக்கு ஏற்ப எங்களது முடிவு அமையும். அதிமுகவே நாங்கள்தான் என்று எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து அதிமுகவை ஒருங்கிணைப்போம்” என்றார்.