×

“அமித்ஷாவை நானும் சந்தித்தேன்! ஆனால் செங்கோட்டையன் பற்றி பேசவில்லை”- தம்பிதுரை

 

மத்திய அமைச்சர் அமித்ஷாவை நானும் சந்தித்தேன் என டெல்லியில் எம்.பி தம்பிதுரை பேட்டியளித்துள்ளார்.


டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. தம்பிதுரை, “என்னை போன்ற தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக்கொண்டு கட்டுக்கோப்பாக செயல்படுகிறோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றுபட்டு தான் அதிமுக செயல்பட்டு வருகிறது. நாங்களும் அதிமுகவில் தான் உள்ளோம். எடப்பாடி பழனிசாமி தான் எங்கள் தலைமை. செங்கோட்டையன் அதிமுகவில் இருந்தால், எடப்பாடியார் சொல்வதை கேட்டு நடப்பார். அதிமுக கட்டுக்கோப்பான ஒரு இயக்கம். தமிழர் ஒருவர் குடியரசுத் துணை தலைவராக தேர்வாக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி. கட்சியில் இருப்பவர்கள் அதிமுக கட்சியினர் மட்டுமே வெளியில் சென்றவர்கள் குறித்து எந்த கருத்தும் கூற முடியாது. நாடாளுமன்றத்தில் இன்று அமித்ஷாவை சந்தித்து பேசினேன். ஆனால் செங்கோட்டையனுடனான சந்திப்பு குறித்து அமித்ஷா சொல்லவில்லை, நானும் கேட்கவில்லை.” என்றார்.