தவெக அரசுக்கு வாக்களித்தது ஏன்? - எஸ்.பி. வேலுமணி விளக்கம்
தி.மு.க. எதிர்ப்பில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், அதன் அடிப்படையில் தான் த.வெ.கவிற்கு ஆதரவு அளித்தோம் என எஸ்.பி.வேலுமணி கூறினார்.
கோவையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய எஸ்.பி.வேலுமணி, “அதிமுக உறுப்பினர் என்ற முறையிலேயே கூட்டத்தில் பங்கேற்றுள்ளேன். இ.பி.எஸ் உடன் எங்களுக்கு இருப்பது ஆரோக்கியமான கருத்து வேறுபாடு தான்; இ.பி.எஸ்.சை முதலமைச்சராக்க உழைத்தவர்கள் நாங்கள். பொறுப்புகள், பதவிகள் வழங்குவதில்தான் அதிமுகவில் பிரச்சனைகள் எழுகின்றன. தி.மு.க. எதிர்ப்பில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், அதன் அடிப்படையில் தான் த.வெ.கவிற்கு ஆதரவு அளித்தோம். திமுகவை எதிர்ப்பதற்காகவே நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தோம். திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்கலாம் என்றவர்கள் மீது என்ன நடவடிக்கை? திமுகவுடன் அதிமுக இணைந்து போக வேண்டும் என்பதில்தான் பிரச்சனை வருகிறது. பொள்ளாச்சி ஜெயராமன் சில தவறான செயல்களை செய்துவருகிறார்” என்றார்.