"எனக்கு இபிஎஸ் கொடுத்த பதவியே வேண்டாம்”- மீண்டும் போர்க்கொடி தூக்கிய வேலுமணி
என்னை நம்பி வந்த 30 மாவட்ட செயலாளர்களை விட்டுவிட்டு நான் பதவி வாங்குவதற்கு தயாராக இல்லை... நான் மட்டும் துணை பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள முடியுமா? என எஸ்பி வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
து.பொதுச் செயலாளர் பதவியை ஏற்கப்போவதில்லை" அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி #AIADMK pic.twitter.com/r52zbcyDVk
— idhayath (@your_idhayath) June 30, 2026
கோவையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய எஸ்பி வேலுமணி, தன்னை நம்பி 30 மாவட்ட செயலாளர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு பதவி வழங்காமல் தனக்கு வழங்கப்பட்ட துணை பொது செயலாளர் பதவியை ஏற்க மாட்டேன். தங்கமணி, விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் ஆகியோர்கள் கட்சியில் அந்ததந்த மாவட்டத்தின் ஜாம்பவான்கள். என்னை நம்பி வந்த 30 மாவட்ட செயலாளர்களை விட்டுவிட்டு நான் பதவி வாங்குவதற்கு தயாராக இல்லை... நான் மட்டும் துணை பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள முடியுமா? எனக்கு பதவி ஆசை இல்லை” என்றார்.