“பதவி கிடைக்கல... தவெகவுக்கு போய்ட்டாங்க..”- எஸ்.பி.வேலுமணி
Jul 2, 2026, 15:27 IST
அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என இபிஎஸ்-க்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தி உள்ளோம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, “கட்சியில் உழைத்தவர்களுக்கு பதவி வழங்காததால் இபிஎஸ்-க்கு கடிதம் எழுதினோம். கட்சியை வளா்க்க ஆரம்ப காலம் முதல் உழைத்தவா்களுக்கு பதவி வழங்கப்படவில்லை, பலரும் பதவியை விட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பதவியிலிருந்து நீக்கப்பட்டதாலும், எதிர்பார்த்த பதவி கிடைக்காததாலும் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் த.வெ.க-வில் இணைந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி நடத்திய மகளிரணி கூட்டத்துக்கு என்னை அழைக்கவில்லை. அதிமுகவில் இருந்து விலகவில்லை, கட்சியின் அடிப்படை உறுப்பினராக தொடர்கிறேன்” என்றார்