×

“அதிமுக ஒன்றுகூடிவிட்டது; சி.வி. சண்முகம் எங்களோடுதான் இருக்கிறார்”- எஸ்.பி.வேலுமணி  

 

அதிமுக ஒன்றுகூடிவிட்டது, சி.வி. சண்முகம் எங்களோடுதான் இருக்கிறார் என அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி  கூறியுள்ளார்.

சென்னையில் சபாநாயகரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, “அதிமுகவில் பிளவு ஏற்படவில்லை, சி.வி. சண்முகம் எங்களோடுதான் இருக்கிறார். அதிமுக ஒன்றுக்கூடிவிட்டது. கருத்து வேறுபாடுகள் சரிசெய்யப்பட்டுவிட்டன. எல்லோருமே ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம், அதிமுக ஒன்றுபட்டுவிட்டது. பரஸ்பரம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று இருதரப்பிலும் கொடுத்த மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டோம். கடிதத்தை பேரவைத் தலைவரிடம் கொடுத்திருக்கிறோம். வெற்றி தோல்வி என்பது ஒரு கட்சிக்கு சகஜம். தோல்வி குறித்து ஆராய வேண்டும் என பழனிசாமியிடம் கூறியுள்ளோம். இரு தரப்பிலும் கொடுக்கப்பட்ட தகுதிநீக்க மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. இருந்த கருத்து வேறுபாடு நீங்கிவிட்டது.பதவிக்காக ஆளும் தரப்புக்கு ஆதரவு கொடுக்கவில்லை, இதை ஆளுங்கட்சியும் உறுதிசெய்துள்ளது. இனி அதிமுக வலுவோடு செயல்படும். நாங்கள் வைத்த கோரிக்கையை பரிசீலிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். பதவிக்காக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தோம் என்று கூறப்படும் புகாரில் உண்மையில்லை” என்றார்.