☰
×

வேலுமணி செய்த உதவியை பழனிசாமி மறந்துவிட்டார் – செங்கோட்டையன்

 

விஜய் தலைமையில்தான் கொங்கு மண்டலம் பயணிக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "மன்னிக்கும் மனப்பான்மையும் பெருந்தன்மையும் இல்லாத தலைமை நீண்ட காலம் நிலைத்ததாக வரலாறு இல்லை. அதே நிலை பழனிசாமிக்கும் ஏற்படும். பழனிசாமி முதலமைச்சராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் உயர்வதற்கு முக்கிய பங்காற்றியவர் வேலுமணி. ஆனால், அவர் செய்த உதவிகளை எடப்பாடி பழனிசாமி மறந்துவிட்டார். ஈபிஎஸ் போன்றவர்கள் எங்கே என்று தேடி பார்க்க வேண்டிய நிலை ஏற்படும். 

திமுகவுடன் ஆட்சி அமைத்து ஜாக்பாட் அடிக்க நினைத்தவர் எடப்பாடி பழனிசாமிதான். பொள்ளாச்சியில் நானும் எஸ்பி வேலுமணியும் பங்கேற்ற திருமண விழா எங்களது குடும்ப உறுப்பினர் இல்ல விழாவாகும்.  திருமண விழாவில் எஸ்பி வேலுமணியுடன் அரசியல் எதுவும் பேசவில்லை. பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டு பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே பேசினோம்" என்றார்.