“துரை வைகோ விரைவில் எதிர்க்கட்சி தலைவராக வருவார்”- செங்கோட்டையன்
முதல்வர் விஜய்க்கு மட்டும்தான் எவ்வளவு கூட்டம்வரும் என்பதை யாரும் அளவிட முடியாது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தாராபுரம் வேட்பாளருக்கு ஆதரவாக நடந்த மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் செங்கோட்டையன், “முதலமைச்சர் விஜய் நாளை 2 மணிக்கு தாராபுரம் வருகிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம். அதிமுகவில் இருக்கும் நிலையைப் பார்க்கும்போது, துரோகத்தைச் செய்த எடப்பாடியின் செயலால்தான் கழகம் சிதைந்து கொண்டிருக்கிறது... நல்லவேளை, நான் தப்பித்துவிட்டேன். முதல்வர் விஜய்க்கு மட்டும்தான் எவ்வளவு கூட்டம்வரும் என்பதை யாரும் அளவிட முடியாது. எவ்வளவு பேர் வருவார்கள் என்பதை நாளை தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வைகோ 90களில் அறிவாலயத்திற்குள் நுழைந்திருந்தால் இன்றைய தினம் மாற்றம் ஏற்பட்டிருக்கும். இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர் வைகோ. துரை வைகோ விரைவில் எதிர்க்கட்சித் தலைவராக வரும் காலம் மிக விரைவில் அமையும். அந்த இடத்திற்கு நீங்கள் வருவீர்கள். மதிமுக எதிர்காலத்தில் எதிர்க்கட்சியாக அமரும்” என்றார்.