×

“பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகிவிட்டது”- செல்லூர் ராஜூ

 

மதுரை கோவில் பாப்பாகுடி வடக்கு தெருவில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 16 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் அமைப்பதற்கு நடைபெற்ற பூமி பூஜையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜு கூறுகையில், “திமுக தேர்தல் நேரத்தில் மட்டுமே பளபளக்கும் சாலை அமைத்து வருகிறது, அதிமுக எப்போதும் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, மதுரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பெரியார் படம் அகற்றப்பட்டது குறித்து எனக்கு தெரியாது, நான் அதை பார்க்கவில்லை. முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது, அதன் காரணமாக கூடுதலாக முதியோர் உதவித் தொகை வழங்கியுள்ளார். திமுக தேர்தல் வரை மகளிர் உரிமைத் தொகை, முதியோர் தொகை வழங்கும். திமுக தேர்தல் நேரத்தில் தில்லு, முள்ளு செய்வது வழக்கமானது. திமுக ஆட்சி மீண்டும் வரக்கூடாது என திமுக தொண்டர்கள் நினைக்கிறார். அதிமுகவில் ஒதுக்கி, நீக்கி வைக்கப்பட்டவர்களுக்கு திமுகவில் பதவி வழங்கப்படுகின்றது.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி, அதிமுக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பு ஏற்பார். திமுகவுக்கு ஒரு கட்சி சரியாக வரவில்லை என்றால் அந்த கட்சியை திமுக உடைக்கும். ஓ.பி.எஸ் தகுதியில்லாமல் பேசுகிறார். திமுக ஜெயலலிதாவை லாரி ஏற்றி கொல்ல முயற்சி செய்தது, ஜெயலலிதாவை சட்டப்பேரவையில் சேலை பிடித்து அவமானம் செய்தார்கள். அதிமுகவை ஓ.பி.எஸ் காட்டி கொடுத்தவர், ஓ.பி.எஸின் அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆகி விட்டது. ஓ.பி.எஸ் திமுகவுக்கு ஆதரவாக பேசியதை எதிர்த்து கேள்வி கேட்டேன். இதனால் ஓ.பி.எஸ்-க்கும், எனக்கும் வாக்குவாதம் நடந்தது. ஓ.பி.எஸ் 2021 ல் இருந்த திமுகவுக்கு ஆதரவாக பேசி வருகிறார். NDA பொதுக் கூட்டத்தின் இறுதியில் "ஒரு கூட்டு கிளியாக" பாடல் ஒலிபரப்பானது ஆபரேட்டர் செய்தது, இதெயெல்லாம் போய் கூட்டணி கட்சிகள் போட சொல்லுமா?, கூட்டத்திற்கு வந்த மக்கள் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பும் பணியை செய்து கொண்டு இருந்தோம், ஊடகம் அதிமுகவில் ஒரு துரும்பை கூட அதை தூணாக்கிவிடும், திமுகவில் நடக்கும் தூணை கூட துரும்பாக மாற்றி விடுவீர்கள். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தான் திமுகவில் மந்திரிகளாக இருக்கிறார்கள். செல்வப்பெருந்தகை நிலையானவர் கிடையாது.. ஒரு விபத்தில் காங்கிரஸ் தலைவராக வந்திருக்கிறார்..” என கூறினார்.