“விஜயினால் படம் தான் காட்டதான் முடியும்! அதிமுக தொண்டர்களை பிரிக்க முடியாது”- செல்லூர் ராஜூ
விஜய் எம்ஜிஆர் படத்தைக் காட்டி படத்தில் காட்டுவது போல் வேண்டுமென்றால் காட்டி கொள்ளலாம், ஆனால் அதிமுக தொண்டர்களை யாரும் பிரிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை விளாங்குடி பகுதியில் உள்ள சொக்கநாதபுரத்தில், ரூ.18 லட்சம் மதிப்பிலான கலையரங்கத்தின் மேற்கூரை திறப்பு விழா, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, “நான் அமைச்சராக இருக்கும்போது மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வந்தேன், திமுக அமைச்சராக இருக்கும்போது டிபன்களை கொண்டு வருகிறார்கள். பத்திரபதிவுத் துறை அமைச்சரின் கிழக்கு தொகுதிக்கும் பாதாள சாக்கடை திட்டம் நாங்கள் கொண்டு வந்தோம். மதுரையில் உள்ள இரண்டு அமைச்சர்கள் திட்டங்கள் எதுவும் கொண்டு வரவில்லை, ஆனாலும் எங்களுடைய திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. புதிதாக மண்டல தலைவர் போட போகிறார்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை..மக்கள் பணத்தை சூறையாடாமல் இருந்தால் முன்னாள் இருந்தவர்கள் போதும் 250 கோடியை சுவாகா பண்ணிட்டாங்க. பொற்கைப் பாண்டியன் வாழ்ந்த மதுரை மதுரையில் மன்னராட்சி நடக்கிறது ஒரு திருடனும் வரமாட்டான்.
எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி அதிமுக. விஜய் எம்ஜிஆர் படத்தைக் காட்டி படத்தில் படம் காட்டுவது போல் வேண்டுமென்றால் காட்டி கொள்ளலாம், ஆனால் அதிமுக தொண்டர்களை யாரும் அவ்வளவு எளிதில் பிரிக்க முடியாது. விஜய்க்கு எங்கள் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பதில் சொல்லுவார். புயல் மையம் கொண்டுள்ளது என சொல்வார்களே அதே போல எடப்பாடி பழனிசாமி சென்ற இடங்களில் மக்கள் மையம் கொண்டுள்ளனர். பெரியார் பேருந்து நிலையத்தில் காம்ப்ளக்ஸ் கட்டி நான்கு வருடமாகிவிட்டது. அதனை திறக்க வக்கில்லை. ஆட்சியில் இருப்பவர்கள் எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள் அது முடியாது” என்றார்.