"ஈபிஎஸ் முதலமைச்சராக அண்ணாமலை உயிரைக் கொடுக்க வேண்டாம்! இத மட்டும் செஞ்சா போதும்”- செல்லூர் ராஜூ
அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வர மக்கள் காத்திருக்கின்றனர் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் ஊழல் வழக்கு தொடர்பாக கைதாகியுள்ளார். ஒரு ஊழல் மேயரை வைத்து, இன்றைக்கு தீர்மானம் நிறைவேற்றி வருகிறது திமுக. அதை கண்டித்து தான் இன்றைக்கு மாநகராட்சிக் கூட்டத்தை அதிமுக உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். புரட்சி தலைவர், புரட்சி தலைவிக்கு பிறகு, 8000 கோடிக்கு மக்களுக்கு பயன்படக்கூடிய திட்டங்களை அளித்தவர் எடப்பாடியார். முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தை கொண்டுவந்தார். ஊழல் நிறைந்த மதுரை மாநகராட்சியை உலகமே பார்த்து காரித்துப்புகிறது.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக அண்ணாமலை உயிரையெல்லாம் கொடுக்க வேண்டாம். பாஜகவினரை அண்ணாமலை தூண்டிவிட்டாலே 2026ல் ஈபிஎஸ் முதலமைச்சர் ஆகிவிடுவார். எடப்பாடி பழனிசாமியை அவர்களே முதலமைச்சராக அமர வைத்துவிடுவார்கள். அதிமுகவை ஆட்சிக்கு கொண்டுவர மக்கள் காத்திருக்கின்றனர்” என்றார்.