×

SIR விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் - செல்லூர் ராஜூ

 

அரசியல் கட்சிகளுக்கு வாக்காளார் சீர்திருத்த படிவத்தை வாங்கும் உரிமையை வழங்க கூடாது,தவறுகள் நடைபெறும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்,

எஸ்ஐஆர் படிவங்களை அரசியல் கட்சியினர் பெறக்கூடாது, தேர்தல் அலுவலர்களை கொண்டு எஸ்ஐஆர் பணிகளை முறையாக எந்த முறைகேடின்றி செய்ய வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரிடம் மனு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூம, “வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அதிமுக முழு மனதாக வரவேற்கிறது. திமுக தொகுதியில் நடைபெறும் தேர்தல் கூட்டங்களில் சிறப்பு திருத்தத்தை ஆதரிக்கிறது. நீதிமன்றத்தில் மற்ற இடங்களில்  எதிர்ப்பும் கீழ் அளவில் பிஎல்ஏ மீட்டிங் தொகுதி செயல்பாடுகளில் திமுக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை ஆதரிக்கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் இரட்டை வேடம் திமுக போடுகிறது. வாக்காளர் சீர்திருத்த விண்ணப்பங்களை  வாங்கி கொடுக்கலாம் என்பதை திமுக  தவறாக பயன்படுத்தும். தேர்தல் அதிகாரிகள் மட்டும் விண்ணப்பம் கொடுத்து பெற வேண்டும். தேர்தல் அதிகாரிகள் அடையாள அட்டை அணிந்து வர வேண்டும்.எந்த அரசியல் கட்சியினருக்கும் விண்ணப்பங்களை வாங்கி கொடுக்கும் உரிமை வழங்க கூடாது.

கடந்த பல மாதங்களுக்கு முன்பு திமுக பொய்யாக அரசு அதிகாரிகள் எனக்கூறி மக்களிடம் அடையாள அட்டை ஆதார் உள்ளிட்டவற்றை பெற்றனர். இதுதொடர்பாக ஏற்கனவே கடந்த ஆட்சியர் புகார் அளித்தோம்.  எஸ்ஐஆர்-ல் எந்த தவறும் நடக்காது என மதுரை மாவட்ட ஆட்சியர் உறுதி கூறி உள்ளார். தேர்தல் ஆப் என்றால் ஆப்பாயிலா என படிக்காதவர்கள் கேட்பார்கள். அதையெல்லாம் சரியாக செய்ய வேண்டும் என கோரி உள்ளோம். திமுக, மற்ற எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே எஸ்ஐஆர்க்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்” என்றார்.