×

அதிமுக தொண்டர்களுக்கு என்னை பார்த்து பயுமா? செல்லூர் ராஜூ

 

மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு செய்துள்ளதில் நாங்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டியதில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 50 லட்சம் மதிப்புள்ள சாலை பணிகள், சுகாதார நிலையங்கள், அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “ஆளுங்கட்சி பல்வேறு விவகாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவாகத்தான் கவர்னர் மாளிகை நோக்கி சென்று, பாஜக ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க உள்ளது. வருகின்ற 22ஆம் தேதி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாங்கள் மனு கொடுக்க உள்ளோம். திமுக அரசு இரண்டு ஆண்டுகளில்  30ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளது. இதில் முதலமைச்சரின் மருமகன் சம்பந்தப்பட்டுள்ளார் என முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியிருந்தார்.

அன்று நாங்கள் ஆட்சியில் இருந்தபோது கூட்டணி கட்சியில் உள்ள திமுகவின் கூட்டணி கட்சியில் உள்ள கட்சியினர், அன்று ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தார்கள். ஆனால் இன்று அமைதியாக உள்ளார்கள். மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு செய்துள்ளதில் நாங்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டியதில்லை. மூன்று, நான்கு மாதங்கள் கால அவகாசம் கொடுத்துள்ளது. 2ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றிக் கொள்ளலாம். ஏற்கனவே பணமதிப்பிழப்பு என்பது திடீரென கொண்டு வந்தது. ஆனால் தற்போது கால அவகாசம் கொடுத்துள்ளது. எனவே மத்திய அரசின் இந்த விவகாரத்தில் எங்களுக்கு கருத்து வேறுபாடு கிடையாது.


தொண்டர்களுக்கு என்னை பார்த்து எந்த பயமும் கிடையாது. பொட்டு வைத்துள்ளேன்.குங்குமம் வைத்துள்ளேன். என் பின்னால் யாரும் அருவாள் வாள் வைத்துக்கொண்டு இல்லை. எனவே எந்த தொண்டர்களுக்கும் எந்த பயமும் இல்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று பணி செய்து கொண்டுள்ளோம். மக்கள் திமுகவிற்கு பதிலடி கொடுக்க தயாராக உள்ளார்கள். திமுக பொய் சொல்லி பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளார்கள்” என்றார்.