“என்னடா சண்டாளர்களா.. நீங்கதான் அடுத்த அமைச்சர்னு சொல்லி சொல்லியே எங்கள ஒழிச்சிட்டிங்க”- செல்லூர் ராஜூ
மதுரையில் அறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “கஜானா காலி என சொல்லி எந்த திட்டத்தையும் கொண்டுவராமல் இருக்கும் முதல்வர் விஜய், ஆஸ்தான ஜோதிடர் பேச்சை கேட்டு ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச்செயலகம் கட்டுவதா? நாடாளுமன்றம் அமைப்பதற்கே ரூ.900 கோடிதான் செலவாகியிருக்கிறது.
கஜானா காலினு சொல்லிட்டு லண்டன் பயணம். அவருடன் நடிகை ஒருவரும் சென்றுள்ளார். அவருடன் எத்தனை நடிகை வேண்டுமானாலும் போகட்டும். எங்களுக்கு ஒண்ணும் கவலை இல்லை. ஆனால் வாக்களித்த மக்களுக்கு நியாயத்தை சொல்லுங்கள். டம்மி முதல்வர் ஆட்சியை பார்த்து கொண்டிருக்கிறோம். மக்கள் வரிப்பணம் ரூ.11 கோடியை செலவு செய்து லண்டன் சென்ற நடிகர், கார் ரேசை நடத்துகிறார். என்னங்கடா சண்டாளர்களா.. அண்ணே... நீங்கதான் அமைச்சரா வரப்போறீங்க... உங்களுக்குத்தான் ஓட்டுனு எல்லா மக்களும் சொறாங்கனு... சொல்லி சொல்லியே எங்களை ஒழிச்சிட்டீங்க” என்றார்.