“திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் ஆர்ப்பாட்டத்திற்கு அலைகடலென திரண்டு வருக”- ராஜேந்திர பாலாஜி
Mar 15, 2026, 12:54 IST
பாலியல் குற்றங்களுக்கு எதிராக விருதுநகரில் 17ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி அறிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கும், தூத்துக்குடியில் பாலியல் கொலை செய்யப்பட்ட சிறுமிக்கும் நீதி வேண்டுமென கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, “இந்த ஆட்சியை தட்டிக்கேட்க யாருமில்லையா? என தமிழக மக்கள் பெருமூச்சு விடக்கூடிய சூழலை நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் ஆர்ப்பாட்டத்திற்கு அலைகடலென திரண்டு வர வேண்டும்” என்றார்.