×

``தவெக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கு.. உண்மைதான்’’ - ராஜேந்திர பாலாஜி

 

எல்லா கருத்து திணிப்புகளையும் பொய்யாக்கி அ.தி.மு.க வெற்றி பெற்று எடப்பாடியார் முதல்வராக பொறுப்பேற்பார் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “தவெக இளைஞர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அது உண்மைதான். ஆனால் அது வெற்றி பெறும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் அதிமுகதான் வெற்றிபெறும். திமுக அடுத்த இடத்திற்கு வரும். எல்லா கருத்து திணிப்புகளையும் பொய்யாக்கி அதிமுக அமோக வெற்றி பெற்று எடப்பாடியார் ஆட்சி அமைப்பார். கருத்துக்கணிப்பு அனைத்தும் கருத்து திணிப்பாகவே பார்க்கப்படுகிறது. இவை அனைத்தும் இரண்டு, மூன்று நாட்களுக்கு விறுவிறுப்பாக இருக்கும். ஆனால் இறுதியில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி ஏற்பார் ” என்றார்.