“விஜய் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்தால் காணாமல் போய்விடுவார்”- புகழேந்தி
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக்கொண்டேன் என கூறவில்லை. எடப்பாடி பழனிச்சாமியுடன் விஜய் சேர்ந்தால் காணாமல் போய்விடுவார். விஜய், எடப்பாடியுடன் சேருவார் என கனவில் கூட நினைக்க வேண்டாம் என பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த பெங்களூரு புகழேந்தி, “வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள், மோசமான வழக்குகள் உள்ளவர்களுடன் விஜய் கூட்டணி வைக்க தயாராக இல்லை. விஜய் யாருக்கும் கிடைக்கவும் இல்லை. யாரிடமும் பேசவும் இல்லை. விஜய் கரூர்க்கு பாதிக்கபட்டவர்களை சந்திக்க சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். கூட்டணி இல்லாமல், உட்கட்சி பிரச்சினையை சரி செய்யாமல் எந்த கட்சியும் இனி ஜெயிக்கப்போவதில்லை. எல்லோரையும் சேர்த்து போகவேண்டும் என்ற மனபக்குவம் இல்லாத பழனிச்சாமியும், உதயகுமாரும் மற்றவர்களும் எதையும் சாதிக்க முடியாது. பெரிய படுதோல்வி ஏற்படும் என்பதில் மாற்றுகருத்து எனக்கு கிடையாது.
எடப்பாடி பழனிச்சாமியுடன் இருக்கும் 2-ம் கட்ட தலைவர்கள் எந்த தொகுதியிலும் போட்டியிட வரமாட்டார்கள், அதுதான் நடக்க போகிறது. 2026-ல் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர்களை தேடி அலைகிற சூழல் வரும். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக்கொண்டேன் என கூறவில்லை. எடப்பாடி பழனிச்சாமியுடன் விஜய் சேர்ந்தால் காணாமல் போய்விடுவார். விஜய், எடப்பாடியுடன் சேருவார் என கனவில் கூட நினைக்க வேண்டாம்” என தெரிவித்தார்.