“விரைவில் தவெகவில் இணைய உள்ளேன்! விஜய் முகத்தில் எங்களது தலைவர்களை பார்க்கிறேன்”- புகழேந்தி
சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள அலுவலக அறையில் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளரும் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த் உடன் அதிமுக முன்னாள் சட்டமன்ற ரவி, வ.புகழேந்தி ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது தொடர்பாக சந்தித்தனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய, அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவி, அரக்கோணம் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான நான் விரைவில் தவெகவில் இணைய உள்ளேன். அதுதொடர்பாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்தை சந்தித்தேன். விரைவில் இணைப்பு நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி, “திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க இ.பி.எஸ் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார். எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று இபிஎஸ் முயன்றார். அதிமுக ஒற்றுமையாக உள்ளது என்று வேலுமணி சொல்கிறார். எல்லாரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறிய வேலுமணி இப்போது கருத்து வேறுபாடு இல்லை என்று சொல்கிறாரே இது ஏற்புடையதா.? இபிஎஸ் மேலும் வெற்றி பெறப்போவதில்லை.பல அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணையுள்ளனர். ஆட்சியை கலைக்க முயற்சி மேற்கொண்டால் அது ஜனநாயக விரோதம் ஆகிவிடும். 6 மாதம் இந்த ஆட்சியை எந்தவிதமான குறையும் சொல்லக்கூடாது. மரியாதை நிமித்தமாக அமைச்சர் என்.ஆனந்தை சந்தித்தேன். பேரறிஞர் அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதாவை முதலமைச்சர் கொண்டாடுகிறார். நீண்ட வரலாற்றுக்குப் பிறகு இந்தியாவில் ஓட்டுக்கு 10 பைசா கூட கொடுக்காமல் ஆட்சிக்கு வந்தது தவெக. இளைஞர்கள் பட்டாளம் அவர் பின்னால் நின்று கொண்டிருக்கிறது. வெகு விரைவில் தவெகவில் இணைய உள்ளேன்.
அதிமுகவிற்கு எதிர்காலம் இல்லை. செம்மலை அதிமுகவிலிருந்து விலகியது மிக வருத்தமாக உள்ளது. அதிமுகவிற்கு. புற்றுநோய் போல் கரையோடிக் கொண்டிருக்கிறது. ஹிட்லரை மிஞ்சி விடுவார் இபிஎஸ். எங்கள் தலைவர்களை முதலமைச்சர் முகத்தில் பார்க்கிறோம். இப்போது சி.வி சண்முகம் எடுத்த முடிவுதான் சரி. நாட்டின் முதலமைச்சர் ஆக இபிஎஸ் வரவேண்டும் என்று அ.ம.மு.க எம்எல்ஏ ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுக்கிறார். அதிமுக உடைந்துவிட்டது என்பது ஒரு ஏமாற்று வேலை. ஆனா இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவார்கள். அதிமுகவின் புது சின்னம்மாவாக லீமா ரோஸ் உள்ளார் என்று என்னிடம் பலர் கூறுகிறார்கள்.லீமா ரோஸிற்கு புது சின்னம்மா என்று பெயர் வைத்துள்ளார்கள். அதிமுகவில் 90% பேர் தவெகவில் இணைய உள்ளனர். அதிமுகவை இபிஎஸ் அழித்துவிட்டார். ஹிட்லர் உயிரோடு இருந்திருந்தால் சேலத்திற்கு சென்று இபிஎஸ் -யை சந்தித்து சால்வை அணிவித்திருப்பார். அதிமுகவை அழித்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என்றார்.