×

உச்சக்கட்ட அதிருப்தி... இபிஎஸ் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! 

 

சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க காத்திருந்து சந்திக்காமலே சென்ற அதிமுகவினரால் பரபரப்பு ஏற்பட்டது.


2026 சட்டப்பேரவைத் தேர்தளுக்கான அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்ட நிலையில் சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வேட்பாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும், வந்திருந்தனர். அப்போது, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க காத்திருக்கும் நாகர்கோவில் தொகுதியை சேர்ந்த அதிமுகவினர் வந்திருந்தனர்.


கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டு எம்.ஆர்.காந்தி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் கூட்டணிக்கே ஒதுக்கினால் எப்படி பணிபுரிவது என கையில் கடிதத்துடன்,எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்க காத்திருந்த அதிமுக மகளிரணி நிர்வாகிகள், அவரை சந்திக்க அனுமதிக்கப்படாததன் காரணமாக பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது  இல்லத்திற்கு வெளியே காலை முதலே காத்திருந்தனர்.இதனையடுத்து, பிரசாரத்திற்கு செல்வதத்காக இல்லத்தை விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமியிடம் கடிதத்தை அளிக்க காத்திருந்தவர்களை சந்திக்காமலே சென்ற எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்காக வாகனத்தின் பின்னாலேயே அய்யா... அய்யா.. என்று கத்திக் கொண்டு அதிமுக மகளிரணியினர் சென்றனர்.