×

 "சி.வி.சண்முகம் தரப்பை விஜய் ஏற்க மாட்டாா்"- ஓ.எஸ்.மணியன்

 

தூய்மையான ஆட்சி நடத்த உள்ளதாக கூறும் முதலமைச்சர் ஜோசப் விஜய், சி.வி.சண்முகம் தரப்பை ஏற்க மாட்டாா் என நம்புகிறேன் என அதிமுக எம்.எல்.ஏ. ஓ.எஸ். மணியன் கூறியுள்லார்.

சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. ஓ.எஸ். மணியன், “ தவெக ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்கும் நாளைய வாக்கெடுப்பில் நாங்கள் எதிராகவே வாக்களிப்போம். ஆதரவாக வாக்களித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியதாக சி.வி.சண்முகம் கூறியதற்கு முடிவெடுக்கும் அதிகாரம் இபிஎஸ்-க்கு மட்டுமே உள்ளது. அதிமுகவில் முக்கிய முடிவுகளை எடுக்க பொதுச்செயலாளா் இபிஎஸ்-க்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இபிஎஸ்-க்கு ஆதரவாக 26 எம்எல்ஏக்கள் கடிதம் அளித்துள்ளனர். அவர்களின் ஆதரவுடன் தான் சட்டமன்ற கொறடா உள்ளிட்ட பிற நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இபிஎஸ் கடிதத்தை சபாநாயகா் ஏற்றுக்கொண்டாரா? என்பது குறித்து விவாதிக்கொண்டிருக்கிறோம். எடப்பாடி பழனிசாமிதான் அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவர், அதிமுகவின் 47 எம்.எல்.ஏ.க்களும் இதற்கான கையெழுத்து போட்டுள்ளனர். அந்தக் கடிதத்தை சபாநாயகரிடம் அளித்துள்ளோம். தூய்மையான ஆட்சி நடத்த உள்ளதாக கூறும் முதலமைச்சர் ஜோசப் விஜய், சி.வி.சண்முகம் தரப்பை ஏற்க மாட்டாா் என நம்புகிறேன்” என்றார்.