×

திருச்செந்தூரில் ஓபிஎஸ் மவுன விரதம்! 

 

தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மௌன விரதம் இருந்து வழிபாடு நடத்துவதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானம் நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுவதை தவிர்த்துவிட்டு சென்றார். 

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது எந்த கட்சியுடன் கூட்டணி குறித்து பேசாத நிலையில் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகப்பெருமானை தரிசனம் செய்து நாளை வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மௌன விரதம் இருப்பதற்காக சென்னையில் இருந்து இன்று மாலை தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். இதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவருக்கு சால்வை அணித்து வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்காமல் பன்னீர்செல்வம் தவிர்த்து சென்றார். இதைத்தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு அவர் கார் மூலம் சென்றார்.