×

பழனிசாமி என்ற பெயரை சொல்ல வெட்கமாக இருக்கிறது - ஓபிஎஸ்

 

ஈபிஎஸ் உடன் இனி இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என ஓபிஎஸ் தரப்பு தடாலடியாக அறிவித்துள்ளது.


சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய ஓ.பன்னீர்செல்வம், “இபிஎஸ் என்ற பெயரை சொல்லவே வெட்கமாக உள்ளது. மாபெரும் இயக்கமான அதிமுகவை ஈபிஎஸ் படுகுழியில் தள்ளிவிட்டார். இன்று அதிமுக தொண்டர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடி வருகின்றனர். அதுக்கு காரணமான ஈபிஎஸ்க்கு தக்க பாடம் புகட்ட வேண்டும், எந்த சூழ்நிலையிலும் எடப்பாடியுடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றார்.