“செங்கோட்டையன் நானும் மீண்டும் சந்திப்பதற்கு வாய்ப்புள்ளது”- ஓபிஎஸ்
Nov 1, 2025, 17:05 IST
செங்கோட்டையன் நானும் மீண்டும் சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் வடக்கு அக்ரஹாரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரை சந்திப்பதற்காக அவரது ஆதரவாளர்கள் வருகை தந்தனர். அவர்களை சந்தித்து விட்டு அவரது தொகுதியான போடிநாயக்கனூர் புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நானும் மீண்டும் சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. நாளை சென்னையில் அனைத்து தலைமை கழக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து அனைவருது முன்னிலையில் எனது கருத்தை தெரிவிக்கிறேன்” என்றார்.