×

”நயினார் நாகேந்திரன்கூட தான் அதிமுகவிலிருந்து பாஜக சென்றார்”

 

கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் மட்டும் வைக்கப்படுவது தேர்தலுக்கு பின்னர் கொள்கைகள் வேறு, கட்சிகள் வேறு என்று ஆகிவிடும் என அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே நடைப்பெற்ற மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு  மாறுவது ஒவ்வொருடைய மனநிலை.கடந்த காலத்தில் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் நயினார் நகேந்திரன் பாஜகவில் சேர்ந்துள்ளார். தனிப்பட்டவர்கள் எடுக்கும் முடிவில் யாரும் தலையிட முடியாத. எந்த கட்சியையும் எந்த தலைவரையும் யாராலும் பலவீனப்படுத்த முடியாது.

கட்சி வளர்வதும் வெற்றி பெறுவதும் அந்த அந்த கட்சியின் தலைவர்களை பொருத்தது. எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரித்த பாஜகவுக்கு தாங்கள்  எதிர்வினையாற்ற போவது இல்லை. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் மட்டும் வைக்கப்படுவது. தேர்தலுக்கு பின்னர் கொள்கைகள் வேறு, கட்சிகள் வேறு என்று ஆகிவிடும். தற்போதும் பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது” எனக் கூறினார். 

அண்மையில் தமிழக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவராகப் பதவி வகித்த சிடிஆர்.நிர்மல்குமார், அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் மற்றும் சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி.விங்க் நிர்வாகிகள் கூண்டோடு விலகி அதிமுகவில் இணைந்தனர். இதனால் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.