×

பரமக்குடி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட3,882 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 94, 049 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 63 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.26 பேர் தனியார் மருத்துவமனையிலும், 37 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,264 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட3,882 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 94, 049 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 63 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.26 பேர் தனியார் மருத்துவமனையிலும், 37 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,264 ஆக அதிகரித்துள்ளது.  இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா உறுதியானது. அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியபட்ட நிலையில் அவரின்  மகன் மற்றும் உதவியாளருக்கும் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களான செஞ்சி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. மஸ்தான், செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு, ஸ்ரீபெரும்புத்தூர் அதிமுக எம்எல்ஏ பழனி, உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. குமரகுரு உள்ளிட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.