×

37 திமுக எம்பிக்களும் ராஜினாமா செய்து அழுத்தம் தரலாமே? அதிமுக எம்எல்ஏ கேள்வி!

நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவின் 37 எம்பிக்களும் ராஜினாமா செய்து அழுத்தம் தரலாமே என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பினார். மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வாக நடத்தப்படும் நீட்டை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள சிரமத்துக்கு உள்ளாகின்றனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நடத்தப்படும் அந்த தேர்வு, தமிழக மாணவர்கள் பலரின் மருத்துவர் கனவை எட்டாக்கனியாகச் செய்கிறது. கடந்த 12 ஆம் தேதி நீட் தேர்வால் அடுத்தடுத்து 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை
 

நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவின் 37 எம்பிக்களும் ராஜினாமா செய்து அழுத்தம் தரலாமே என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பினார்.

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வாக நடத்தப்படும் நீட்டை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள சிரமத்துக்கு உள்ளாகின்றனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நடத்தப்படும் அந்த தேர்வு, தமிழக மாணவர்கள் பலரின் மருத்துவர் கனவை எட்டாக்கனியாகச் செய்கிறது. கடந்த 12 ஆம் தேதி நீட் தேர்வால் அடுத்தடுத்து 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவையில் எதிரொலித்தது.

அப்போது நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தரவில்லை என எதிர்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். மேலும், அரசு செய்யாவிடில் திமுக மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் இது குறித்து பேசிய அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, நீட் விவகாரத்தில் திமுகவின் 37 எம்பிக்களும் ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாமே என கேள்வி எழுப்பினார்.