×

மகளிருக்கு இலவச பேருந்து பயணம்! ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அதிமுக நிர்வாகி

திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கும் திட்டம் அமல்படுத்தப்படுமென சட்டமன்றத் தேர்தலின் போது மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்தார். அதன் படியே, தான் அரியணையில் அமர்ந்த முதல் நாளே பெண்கள் இலவசமாக பயணிப்பதற்கான கோப்பில் கையெழுத்திட்ட மு.க.ஸ்டாலின், அத்திட்டத்தை உடனே அமல்படுத்தியது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன்படி, சாதாரண பேருந்து கட்டணம் இருக்கும் பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். எந்தெந்த வழித்தடத்தில் எத்தனை பேர் பயணிக்கின்றனர் என்பதை கண்டறிய
 

திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கும் திட்டம் அமல்படுத்தப்படுமென சட்டமன்றத் தேர்தலின் போது மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்தார். அதன் படியே, தான் அரியணையில் அமர்ந்த முதல் நாளே பெண்கள் இலவசமாக பயணிப்பதற்கான கோப்பில் கையெழுத்திட்ட மு.க.ஸ்டாலின், அத்திட்டத்தை உடனே அமல்படுத்தியது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன்படி, சாதாரண பேருந்து கட்டணம் இருக்கும் பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். எந்தெந்த வழித்தடத்தில் எத்தனை பேர் பயணிக்கின்றனர் என்பதை கண்டறிய மகளிருக்கு இலவச டிக்கெட் மட்டும் வழங்கப்பட்டுவருகிறது

இந்நிலையில் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு நன்றி நன்றி நன்றி என அதிமுக தொண்டர் ஒருவர் போஸ்டர் ஒட்டி நன்றி தெரிவித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மற்றும் முக ஸ்டாலினின் புகைப்படத்தை ஒரே போஸ்டரில் அச்சடித்து குணசேகரன் என்ற அதிமுக தொண்டர் அவரது தொகுதி முழுக்க ஒட்டியுள்ளார். எந்த ஊரில் இச்சம்பவம் நடந்தது என தெரியவில்லை. ஆனால், இணையத்தில் வைரலாகிவருகிறது