வரும் 31ம் தேதி கூடுகிறது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
Dec 28, 2025, 16:59 IST
டிசம்பர் 31 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 31 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு ஈபிஎஸ் தலைமையில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக தேர்தல் பணிகளில் மும்மரம் காட்டிவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் இன்று மீண்டும் தனது பரப்புரையை தொடங்கியுள்ளார். திருப்போரூர், சோழிங்கநல்லூர் தொகுதிகளில் இன்று பரப்புரை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.