×

அமித் ஷா சென்னை வருகை - அதிமுக தலைவர்கள் சந்திக்க திட்டம்!

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வரவுள்ள நிலையில், அதிமுக தலைவர்கள் அவரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாட்கள் பயணமாக சென்னை வருகிறார்.  இன்று மாலை சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அதிமுக மூத்த நிர்வாகிகள், நாளை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின்படி முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக சென்னையிலேயே தங்கியுள்ளனர். இதற்கிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு புறப்பட்டு சென்றுள்ளார்.