×

அதிமுகவை வம்புக்கு இழுத்தால் விஜய் வாங்கிக் கட்டிக் கொள்வார்- ஜெயக்குமார் எச்சரிக்கை

 

விஜய் எப்படி அழைத்தாலும் தவெகவுடன் எந்த கட்சியும் கூட்டணிக்கு செல்லவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “திமுக- காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் உள்ளது. தேர்தலில் அதிமுக அணியே வெற்றி பெறும். திமுக அரசு வரிகளை உயர்த்தியதால் ஒரு குடும்பத்துக்கு மாதம் ரூ.25,000 வரை கூடுதல் செல்வாகிறது. வரி உயர்வு, விலையேற்றத்தால் ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் வரை செலவாகிறது. கஞ்சா போன்ற போதை வஸ்துகளால் ட்தமிழகம் சீரழிந்து கொண்டிருக்கிறது.

விஜய் முதலில் செய்தியாளர்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். எழுதி வைத்ததை வாசிக்கக்கூடாது. விஜய் எப்படி அழைத்தாலும் யாரும் கூட்டணிக்கு செல்லுவதில்லை. அதிமுகவை வம்புக்கு இழுத்தால் விஜய் வாங்கி கட்டி கொள்வார்” என்றார்.