விஜய் சொந்த காசில் ரூ.1 கோடி கொடுத்திருக்கலாமே!- ஜெயக்குமார்
கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல், விஜய் அரசுப்பணி வழங்கியுள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அரசு வேலை கொடுத்து டிஎன்பிஎஸ்சிக்கு படிக்கிறவர்களின் வாய்ப்பை ஏன் பறிக்கணும், இத்தனை ஆண்டுகள் கோடிக்கணக்கில் சம்பாதித்த பணத்தில் 32 குடும்பத்திற்கும் தலா ஒரு கோடி கொடுத்திருக்கலாமே? கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாகத்தான் அவருடைய கதை இருக்கிறது. கரூரில் முதலமைச்சர் விஜயின் நேற்றைய பேச்சு வழக்கமான ஸ்கிரிப்ட் தான், புதுமாதிரியான ஒன்று இல்லை. கரூர் இடைத்தேர்தலை மனதில் கொண்டே விஜய் பேசி இருக்கிறார். கரூரில் முதல்வர் என்பதை மறந்து அருவருக்கத்தக்க வகையில் விஜய் பேசியுள்ளார். மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியில் எதையாவது நிறைவேற்றியது உண்டா..? முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களை முதலமைச்சர் விஜய் பேசுவதில்லை. ஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊழலை ஒழிப்பேன் என்று பேசுகிறார் முதல்வர் விஜய். இன்னும் சினிமா சூட்டிங் போலவே முதலமைச்சர் நடந்து கொள்கிறார்” என்றார்.