×

"போட்டியே திமுக vs அதிமுகவுக்குதான்.. நடுவுல நானும் ரௌடிதான்னு விஜய் வருகிறார்"- ஜெயக்குமார்

 

விஜய் அரசியல் கட்சியின் தலைவராக இருக்க அருகதையற்றவர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.


பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணாவின் நினைவிடத்தில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவை ஊழல் சக்தி என விஜய் விமர்சித்துள்ளார். அதிமுகவை யார் யார் விமர்சிப்பது என்ற விவஸ்தை இல்லாமல் போய்விட்டது. விஜய் வாங்கும் சம்பளத்தில் கருப்பு பணம் எவ்வளவு, வெள்ளை பணம் எவ்வளவு, அவர் செலுத்தும் வருமான வரி எவ்வளவு என்பதை விஜய் சொல்ல முடியுமா?

லாட்டரி பணத்தில் கட்சி நடத்தும் விஜய், பாவப்பட்ட மக்களை லாட்டரி மூலம் சுரண்டி ஆதவ் அர்ஜுன் வீட்டில் விருந்து சாப்பிட்டுள்ளார். கரூரில் 41 பேர் பலியான குற்ற உணர்வே இல்லாமல், கட்சி ஆண்டு விழாவில் விஜய் நடனமாடியதை பார்க்கும் போது உயிரிழந்தவர்களின் குடும்பம் என்ன பாடுபடும். ஈவு இரக்கம் இல்லாத விஜய் அரசியல் கட்சிக்கு தலைவராகச் இருக்கவே அருகதையற்றவர். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி இருக்கும் சூழலில், நானும் ரவுடி தான் என வடிவேலு பாணியில் விஜய் உள்ளே வருகிறார்” என்றார்.