முழு பாறாங்கல்லை மறைப்பதா?- அமைச்சர் சுப்பிரமணியனை விளாசிய ஜெயக்குமார்
சர்வாதிகாரபோக்கு கொண்ட இந்த ஆட்சியை தூக்கி ஏறிய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எண்ணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தமிழகத்தில் கஞ்சா புழக்கம் இல்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் பொய் சொல்கிறார். முழு பூசணி என்று சொல்ல மாட்டேன், முழு பாறாங்கல்லை சோற்றில் மறைக்கிறது திமுக... கஞ்சா இல்லை...போதை வஸ்து இல்லை என்று பொய்களை கூறி வருகிறார் மருத்துவதுறை அமைச்சர். போதை வஸ்து ஆறாக ஓடுகிறது.. இந்த தேர்தல் திமுகவிற்கு மிக பெரிய சரிவாக இருக்கும். சர்வாதிகாரபோக்கு கொண்ட இந்த ஆட்சியை தூக்கி ஏறிய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எண்ணம். அ.தி.மு.க.வை மக்கள் ஆட்சியில் அமர வைப்பார்கள். தேர்தல் நேரத்தில் திமுக அரசு அறிவிக்கும் எந்த அறிவிப்பும் நிறைவேற்றப்படாது. இது எல்லாம் வாக்குகளுக்காக திமுக காட்டும் ஏமாற்று வித்தை என்பது மக்களுக்கு நன்றாக புரியும்.
திருத்தணியில் வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தால் ஒட்டுமொத்த தமிழகமே தலைகுனிந்து நிற்கிறது. வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் மீது ஈவு, இரக்கமில்லாமல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் இல்லை எனக் கூறுவது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்” என்றார்.