×

“விஜய் தனித்தன்மைக்காக முதலமைச்சர் வேட்பாளர் என பேசியிருக்கலாம்”- ஜெயக்குமார்

 

அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்பதே எங்களது நிலைப்பாடு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “முதலமைச்சர் வேட்பாளர் விஜய் தான் என்பது தவெக கருத்து. ஆனால் அதனை மக்கள்தான் முடிவு செய்வர். முதல்வர் வேட்பாளர் தாம்தான் என யார் வேண்டுமானாலும் கூறலாம். வாக்காளர் பட்டியலிலிருந்து யார் பெயரையும் நீக்க அதிமுக விடாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அவர்கள் தங்களுடைய தனித்தன்மையை காண்பிக்கிறார்கள்.அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என் பதே அதிமுகவின் நிலைப்பாடு. தவெக தனித்தன்மையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் விஜய் பேசிவருகிறார்” என்றார்.