“பணம் கொடுக்காமல் மோசடி செய்துவிட்டார்”- கடம்பூர் ராஜூ மீது அதிமுக நிர்வாகிகள் அடுக்கடுக்கான புகார்
அதிமுகவில் இருந்து அண்மையில் தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ மீது அதிமுக நிர்வாகிகள் தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து அண்மையில் தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ மீது அதிமுக நிர்வாகிகள் தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். 2020ல் சாலை பணியை கடம்பூர் ராஜூ செய்ய கூறியதாகவும், அதற்கு இதுவரை நிதி தரவில்லை எனவும் புகார் கூறியுள்ளனர். சாலை அமைத்ததற்கு தர வேண்டிய சுமார் ரூ.27 லட்சத்தை கேட்டபோது கடம்பூர் ராஜூ மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கிரிதரன் என்பவர் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். ரூ.27 லட்சம் நிதியை கேட்டபோது மிரட்டியதோடு ஜாதி பெயரை கூறி திட்டியதாகவும் கிரிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேபோல் தனக்கும் ரூ.4 லட்சம் தராமல் மோசடி செய்துவிட்டதாக கடம்பூர் ராஜூ மீது கயத்தாறு அதிமுக நிர்வாகி சாமிராஜ் என்பவரும் புகார் அளித்துள்ளர். அரசு ஒப்பந்த வேலை செய்ததற்காக ரூ.4 லட்சத்தை தராமல் கடம்பூர் ராஜூ மோசடி செய்ததாகவும் சாமிராஜ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.