×

தமிழகத்தில் சந்துக்கடைகளும் கள்ளச்சாராயமும் பெருகிவிட்டன- தங்கமணி

 

தமிழகத்தில் சந்துக்கடைகளும் கள்ளச்சாராயமும் பெருகிவிட்டதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் கே.பி சரவணன் தலைமையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் 69 ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி மற்றும் சரோஜா அவர்கள் கலந்து கொண்டு பிரமாண்ட கட்சிக்கொடியை ஏற்றி மக்களிடம் உரையாற்றினார். முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகைபுரிந்த அமைச்சர் தங்கமணியை வரவேற்கும் விதமாக  ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை ஓரங்களில் நின்று பெண்கள் மலர் தூவி வரவேற்றனர். குறிப்பாக மெட்டாலா அதிமுக கழக தொண்டர்கள் சார்பாக 250 கிலோ எடை கொண்ட 12 அடி உயர ரோஜாப்பூ மாலை கிரேன் மூலம் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு அணிவித்தனர்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, “தமிழகத்தில் கள்ளச்சாராயமும், சந்து கடைகளும் அதிகமாக பெருகிவிட்டது. கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய மதுவிலக்கு துறை அமைச்சரும், கல்வித்துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி, கடந்த ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் இறந்ததாக மக்களிடம் சொல்லி திசை திருப்பி வருகின்றனர். இந்த ஆட்சியில் கல்லூரி மாணவரிடம் கஞ்சா மற்றும் போதை வஸ்துகள் பழக்கம் அதிகமாகி விட்டது என சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்” என்றார்.