☰
×

"பைலை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வருமாறு பெண் எஸ்பிக்கு அமைச்சர் அழைப்பு"- ஈபிஎஸ் 

 

6 மாதத்தில் பாருங்கள் ஆட்சி எப்படி இருக்கும் என்று கூறினார்கள், இப்போது நடப்பது என்ன? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

கரூரில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "6 மாதத்தில் பாருங்கள் ஆட்சி எப்படி இருக்கும் என்று கூறினார்கள், இப்போது நடப்பது என்ன? பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதாக கூறிய தவெக அரசால், ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை. பைலை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வருமாறு பெண் எஸ்பிக்கு அமைச்சர் அழைப்பு என செய்திகள் வெளியாகின்றன. எம். ஆர். விஜயபாஸ்கர் தவெகவில் போய் சேர்ந்துள்ளார்.  அங்கு ஒருவராது உங்களை மதிக்கிறார்களா? அதிமுகவில் இருக்கும்போது விஜயபாஸ்கர் 100 வது நம்பராக இருந்தவர். தவெகவிற்கு சென்று பூஜ்ஜியத்தில் இருக்கிறார்" என்றார்.