×

அதிமுகவை நிர்மூலமாக்க சிலர் முயற்சி - எடப்பாடி பழனிசாமி 

 

அதிமுகவை நிர்மூலமாக்க சிலர் முயற்சிக்கின்றனர், ஆனால் அது எப்போதும் நடக்காது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்


சென்னையில் நடந்த தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனையில்  பேசிய எடப்பாடி பழனிசாமி, “பணத்தை காப்பாற்றிக் கொள்ளவும், படவி சுகத்திற்காகவும் அதிமுகவினர் பலர் மாற்று கட்சிக்கு சென்றுள்ளனர். அதிமுகவை நிர்மூலமாக்க சிலர் முயற்சிக்கின்றனர், ஆனால் அது எப்போதும் நடக்காது. பீனிக்ஸ் பறவை போல அதிமுக மீண்டும் வெகுண்டு எழுந்து ஆட்சியில் அமரும். தேர்தலில் தவெகவின் வெற்றிக்கான காரணம் என்ன என்பதை நாம் ஆராயத் தேவையில்லை. ஏனென்றால் வெளிப்படையாகவே தெரிகிறது. வெற்றிக்கு கவர்ச்சியான ஒரு மாயை காரணம். அதிமுக எத்தனையோ வெற்றி, தோல்விகளை கண்ட இயக்கம்” என பேசியுள்ளார்.