×

தமிழக வரலாற்றில் டிஎன்பிஎஸ்சி தேர்வை நடத்த முடியாமல் ரத்து செய்தது இந்த ஆட்சியில்தான் - இபிஎஸ்

 

சென்னை அடுத்த பரப்புரைக்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் துண்டை சுழற்றி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

பின்னர் பரப்புரையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தேர்தல் வரவுள்ள நிலையில், திமுக ஆட்சியில் அவசர கோலத்தில் திட்டங்கள் அறிவிப்பது ஏன்? அவசர அவசரமாக விடப்படும் டெண்டர்கள் அனைத்தும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்யப்படும். தமிழக வரலாற்றில் டிஎன்பிஎஸ்சி தேர்வை நடத்த முடியாமல் ரத்து செய்தது இந்த ஆட்சியில்தான். ஊடகங்கள் செய்திகளை நேர்மையாக வெளியிட்டால் திமுக என்ற கட்சியே இருக்காது. திமுக ஆட்சியும் இருக்காது. 525 வாக்குறுதிகளில் ஒரு சதவிகிதம் கூட நிறைவேற்றவில்லை. ஸ்டாலின் வெள்ளை அறிக்கை விட வேண்டும் .கூட்டணி கட்சி தலைவர்களே வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என கூறுகின்றனர். எதிர்க்கட்சியாக பிரதமரை எதிர்த்து கருப்பு பலூன்.ஆளுங்கட்சியாக வந்ததும் வெள்ளைக்குடை பிடித்தது.இதுதான் ஸ்டாலினின் இரட்டை வேடம். இரட்டை வேடம் போடும் கட்சி திமுக. கிரசர் உரிமையாளர்களை மிரட்டி பணத்தை பறிக்கின்றார்கள் திமுக.அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாநில சுயாட்சி பற்றி கவலைப்படாத திமுக தேர்தல் நேரத்தில் மட்டும் அதனை பேசுகிறது. மாநில சுயாட்சி தேவை என்று பேசும் ஸ்டாலின், மத்தியில் கூட்டணியில் இருந்தபோது சுயாட்சி ஞாபகம் வரவில்லையா?

திமுக ஆட்சியில் அரசுப் பணிக்கான தேர்வுகள் முறையாக நடத்தப்படுவதில்லை. தமிழினக் காவலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் திமுக அரசு, காவல்துறை எஸ்.ஐ. தேர்வில் ஒரு தமிழ் வினாவை கூட கேட்காதது ஏன்? திமுக அரசை விரட்டி அடிக்க இளைஞர்கள் முடிவெடுத்து விட்டார்கள். அதிமுகவை எதிர்க்கும் சக்தி திமுகவுக்கு இல்லை. உழைக்கும் மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் கட்சி அதிமுக” என்றார்.