“எம்ஜிஆர் பெயரை சொன்னால் எம்ஜிஆர் ஆகி விட முடியுமா?”- விஜயை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி
சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது அரசியலுக்கு வந்தவர் எம்.ஜி. ஆர். இன்று யார் யாரோ சினிமாவில் நடித்துவிட்டு எம்ஜிஆர் போல் கனவு காண்கிறார்கள் ஒருபோதும் அது நடக்காது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1975 ஆம் வெளியான எம்.ஜி.ஆரின் இதயக்கனி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு அப்படத்தின் 225 ஆவது நாள் கொண்டாட்டம் சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கில் நடைபெற்றது. 225வது நாள் வெற்றி விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களுடன் கலந்து கொண்டு திரைப்படத்தினை பார்த்து மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கே. பி முனுசாமி,எஸ்.பி வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மேடையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் இதயக்கனி திரைப்பம், இது நாள் வரை தமிழகத்தில் எந்த ஒரு திரைப்படமும் 225 நாட்கள் திரையிட்டது கிடையாது. அந்த வெற்றியை நமது தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நடித்த இதயக்கனி திரைப்படம் தான் சரித்திரத்தை படைத்துள்ளது. சத்யா மூவிஸ் தயாரிப்பில் எம்ஜிஆரின் இதயக்கனி 225 ஆம் நாள் வெற்றி விழாவில் எம்ஜிஆரின் ரசிகன் என தெரிவித்துக் கொள்கிறேன். நான் திரையரங்குக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிறது. இது 26 ஆம் ஆண்டில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் படத்தை தான் பார்த்துள்ளேன். மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு 225 ஆண்டுகள் திரையரங்கில் ஓடி சாதனை படைத்துள்ளது. மறைந்த பிறகும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எங்களது புரட்சித்தலைவர் எம்ஜிஆர். சினிமாவிலும் சரி அரசியலும் சரி யாரும் நிலைத்து இருக்க முடியாது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெயரை சொல்லுபவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆக முடியாது எம்ஜிஆர் ஒருவரே எம்ஜிஆர். அண்ணாவின் இதயத்தில் நமது தலைவர் எம்ஜிஆர் இருப்பது போன்ற இதயக்கனி என்று டைட்டில் போடப்பட்டது. அப்போது சினிமா தியேட்டரில் அனைத்து மக்களும் கைதட்டி பாராட்டினார்கள். அதே நிகழ்ச்சி இன்று எனக்கும் ரசிகர்களுக்கும் கிடைத்துள்ளது.
அண்ணா தலைமையில் ஆட்சியை பிடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் எம்ஜிஆர். அண்ணா வரவிற்கு பிறகு கருணாநிதி முதலமைச்சரானது பிறகு இரண்டாவது முறையாக திமுக ஆட்சி அமைப்பதற்கு அண்ணாவின் இதயக்கனி எம்ஜிஆர் தான் காரணம். ஏற்றுவிட்ட ஏனைய ஏற்றி உதைக்கும் வகையில் அன்று முதலமைச்சர் கருணாநிதி கணக்கு கேட்ட காரணத்திற்காக கட்சியிலிருந்து தலைவர் எம்ஜிஆர் வெளியற்றார். அன்று ஊழல் ஆட்சியை எதிர்த்து எம்.ஜி. ஆர். அண்ணா திமுகவை தொடங்கினார். திமுகவை வீழ்த்தி முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்தவர் நம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் வரை திமுகவால் வெற்றி பெறவே முடியவில்லை. இதயக்கனி மட்டுமல்ல நாடோடி, மன்னன், ஆயிரத்தில் ஒருவன், உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்கள் ரீலீஸ் செய்தாலும் பிளாக்பிச்டர் ஹிட் அடிக்கும். சினிமாவில் அரசியலை புகுத்தி வெற்றி கண்ட ஒரே தலைவர் எம்ஜிஆர். சினிமாவில் சூப்பர் ஸ்டார் எம்ஜிஆர். சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது அரசியலுக்கு வந்தவர் எம்.ஜி.ஆர். இன்று யார் யாரோ சினிமாவில் நடித்துவிட்டு எம்ஜிஆர் போல் கனவு காண்கிறார்கள் ஒருபோதும் அது நடக்காது” என்று கூறினார்.