“அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்”- மோடி முன் ஈபிஎஸ் ஆக்ரோஷ பேச்சு
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “பிரதமர் மோடி இந்த மண்ணில் கால் வைத்ததும், இயற்கையே சூரியனை மறைந்துவிட்டது. சூரியன் மறைந்து குளிர்ச்சி நிலவுவதே சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு சான்று. மக்களை வாட்டி வதைக்கும் ஆட்சி தேவையா? திமுக ஆட்சி கொடுத்தது துன்பம், வேதனை, ஊழல்தான். ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்கள் சுரண்டப்படலாமா? கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர்கள்தான் ஆள வேண்டுமா? எந்த தகுதியும் இல்லாத உதயநிதியை அமைச்சராக்கினார்கள். தமிழகத்தில் கருணாநிதி குடும்பம் ஆட்சியில் அமர்ந்துகொண்டு கொள்ளை அடித்துக்கொண்டிருக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல், திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல். இதுதான் திமுகவுக்கு இறுதித்தேர்தல்.
அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்களை தந்தவர் மோடி. தீய சக்தி திமுகவை வீழ்த்துவோம். மோடி தந்த திட்டங்களை திமுக அரசு முடக்கியது. அதிமுகவின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் என்ன பேசப்போகிறார்கள் என்பதை தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து நிதி பெற்றோம்” என்றார்.