×

அதிமுக துணைப்பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என் ஆதவ் அர்ஜுனா கேட்டார்- இபிஎஸ்

 

தமிழகத்தின் தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தன்னை வந்து சந்தித்து அதிமுகவில் துணைப்பொதுச்செயலாளர் பதவி கேட்டதாகவும் அதற்கு உழைப்பவர்களுக்கு தான் பதவி எனக்கூறி மறுத்துவிட்டதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஆதவ் அர்ஜுனா முதலில் திமுகவில் இருந்தார். அடுத்தது விசிகவிற்கு சென்றார். அதற்கு பிறகு என்னை சந்தித்து அதிமுகவில் துணைப்பொதுச்செயலாளர் பதவி கேட்டார். தம்பி, அதிமுக கட்சியில் பதவி விற்பது கிடையாது என்று சொன்னேன். அதற்கு பிறகு தவெகவிற்கு சென்று அந்த கட்சியை குத்தகைக்கு எடுத்துவிட்டார். மேட்டூர் அணை நீர் திறப்பு விழாவை முதலமைச்சர் நேரில் வந்து திறந்து வைத்தார். அந்தக் காலத்தில் மேட்டூர் அணை கட்டுவதற்கு ரூ.4.50 கோடி செலவு செய்யப்பட்டது. முதலமைச்சரின் வருகைக்கான ஏற்பாடுகளுக்கு ரூ.4.50 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அப்போது பாட்டிக்கு கண்ணாடி மாட்டிவிட்டு போஸ் கொடுத்துவிட்டு போய்விட்டார். தமிழக முதலமைச்சர் விஜய், எம்ஜிஆர் போன்று நினைக்கிறார். எம்ஜிஆர் என்றால் எம்ஜிஆர் மட்டுமே; அவருக்கு நிகர் யாரும் கிடையாது.


மின்வெட்டு என்பது தற்போது மின்பற்றாக்குறை என பெயர் மாற்றப்பட்டு விட்டது. தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு இருந்த காலத்தில் கூட 18 ரூபாய்க்கு தான் மின்கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது யூனிட்  30 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. இதில் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாருக்கு 4 ரூபாய் கமிஷன் என பரவலாக கருத்து வருகிறது.. இது லஞ்சம் இல்லையா? தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது” எனக் குற்றஞ்சாட்டினார்.