×

தொழில் முதலீட்டை இப்படி தான் ஈர்ப்பீர்களா? செய்தித் தாளில் புகைப்படம் மாறி வந்து விட்டதோ? - இபிஎஸ்

 

தொழில் முதலீட்டை இப்படி தான் ஈர்ப்பீர்களா? செய்தித் தாளில் புகைப்படம் மாறி வந்து விட்டதோ?  முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

திருச்சியில் அதிமுக மாவட்டச் செயலாளர் இல்ல திருமண விழாவில் உரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தவெக தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டது. தவெக ஆட்சியில் மின்வெட்டு பிரச்சனை ஏற்பட்டது. அதிமுக ஆட்சியில் மக்களுக்கு நன்மை கிடைத்தது. தவெக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. முதல்வர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றிருப்பதாக சொன்னார்கள். ஆனால், இன்றைக்கு வேற ஃபோட்டோதான் வந்துருக்கிறது.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெறும். தவெக ஆட்சியில் எந்த நன்மையும் கிடைக்காததால் பொது மக்கள் போராடி வருகின்றனர். நிதி நெருக்கடி இருக்கும் நிலையில் தற்போது ரூ.1200 கோடிக்கு புதிய தலைமைச் செயலகம் தேவையில்லை. குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து அழைப்பதுபோல் அதிமுக எம்.எல்.ஏக்களை தூக்கி சென்றுவிட்டனர். மரகதம் குமரவேலும், சத்தியபாமாவும் விலை போய்விட்டனர். மக்கள் நலனிற்காக ஒரு துரும்பைக் கூட தவெக கிள்ளிப்போடவில்லை. குதிரை பேரத்திற்கு எம்.எல்.ஏக்கள் விலை போனதால் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. எந்தவித மக்கள் பணியும் செய்யாமல் தவெகவினர் ஆட்சிக்கு வந்துள்ளனர்.தாராபுரம், மதுராந்தகம் எம்.எல்.ஏக்கள் சுயநலத்திற்காக பதவியை ராஜினாமா செய்தனர்” என்றார்.