“இப்பொழுது ஸ்டாலின் சட்டையை கழட்டி கொள்ள வேண்டிதானே?”- எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டுக்கு பாராளுமன்ற தொகுதி வரையறை 59ஆக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துவிட்டார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “NDA கூட்டணியின் முதல் நாளே சொல்லிவிட்டோம், தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி, ஈபிஎஸ் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று... ஏற்கனவே இருந்த கோவை தெற்கு தொகுதி மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இந்தியாவிலேயே குப்பைக்கு வரி போட்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். கரண்ட் பில்லை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது. எனது தொகுதியில் இதுவரை நான் பிரசாரத்தை தொடங்கவில்லை. எனது தொகுதி மக்கள் என்னை குடும்பத்தில் ஒருவராக நினைக்கிறார்கள். நான் மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
அரசு அதிகாரிகள் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும் ஒருகட்சிக்கு ஆதரவாக செயல்பட்டால் அரசு அதிகாரிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் . இனி வரும் எடப்பாடி பழனிசாமி வேறு விதமாக இருப்பார். நீட் தேர்வை ரத்து செய்வோம் என சொன்னார்கள். அதை நிறைவேற்றினார்களா? நீட் விலக்கு ரகசியத்தை உதயநிதி சொன்னாரா? கடைசி வரை அந்த ரகசியத்தை உதயநிதி சொல்லவே இல்லை. தமிழக எம்.பிக்களின் எண்ணிக்கை 59- ஆக உயரும் என அமித்ஷா பாராளுமன்றத்தில் அறிவித்து விட்டார். ஏற்கனவே இருந்த தமிழ்நாட்டின் சதவிதம் 7.18. ஆனால் இது குறைந்துவிடும் என ஸ்டாலின் கருப்பு சட்டை போட்டார். ஆனால் இப்பொழுது 5% உயர்ந்திருக்கிறது. இப்பொழுது கருப்பு சட்டையை கழட்டாதது ஏன்.. ?சட்டையை கழட்டி கொள்ள வேண்டியதானே?” எனக் கேள்வி எழுப்பினார்.