☰
×

தவெக அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானமா?- எடப்பாடி பழனிசாமி பதில்

 

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவெக அரசுக்கு திராணி இல்லை என  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அனைத்து விஷயங்களையும் பொதுவெளியில் பேச முடியாது; தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கூடிய ஒரு சூழல் வரும்போது அனைத்து ஊடக நண்பர்களையும் அழைத்து சொல்வோம். இந்த அரசு கும்பகர்ணனைபோல தூங்கிக்கொண்டிருக்கிறது. எவ்வளவு முறை தட்டி எழுப்பினாலும் எழுந்தபாடில்லை. தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவெக அரசுக்கு திராணி இல்லை" என்றார்.