"லண்டனுக்கு தொழில் முதலீட்டுப் பயணமா? இன்பச் சுற்றுலாவா?" - எடப்பாடி பழனிசாமி
இதுவரை ரூ.40,000 கோடி கடன் வாங்கியுள்ளது தவெக அரசு. லண்டனுக்கு தொழில் முதலீட்டுப் பயணமா? இன்பச் சுற்றுலாவா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தொழில் முதலீட்டை ஈர்க்க லண்டன் சென்றமுதலமைச்சர் தொழில்துறை அமைச்சரை ஏன் அழைத்து செல்லவில்லை. இதுவரை ரூ.40,000 கோடி கடன் வாங்கியுள்ளது தவெக அரசு. லண்டனுக்கு தொழில் முதலீட்டுப் பயணமா? இன்பச் சுற்றுலாவா? அதிமுக நிர்வாகிகள் இல்லத்தில் ரெய்டு நடத்தினால் ஒன்றும் கிடைக்காது. தவெக நிர்வாகிகள் வீட்டில் ரெய்டு நடத்தினால் நிறைய பணம் சிக்கும். அதிமுகவில் வெற்றி பெற்ற 2 சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரத்தின் மூலமாக விலைக்கு வாங்கு, வேண்டுமென்றே பதவி விலக வைத்து, மக்கள் தீர்ப்புக்கு எதிராக மக்களை மதிக்காமல் இருந்தவர்களுக்கு இந்தத் தேர்தல் மூலம் மக்கள் பாடம் புகட்டுவார்கள். இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தல் என்று தவெகவுக்கு ஆதரவு அளித்துவரும் கம்யூனிஸ்ட் கட்சிகளே கூறியுள்ளன. இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு குறித்து விரைவில் தெரிவிப்பார்கள்.
தமிழ்நாட்டில் எங்குமே மின்வெட்டு இல்லை என்று அறிவித்துவிட்டு, தற்போது மின் பற்றாக்குறை இருப்பதாகக் கூறி வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க இருப்படையாகத் துறை அமைச்சர் தெரிவிப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் மின்வெட்டே இல்லாதபட்சத்தில், அரசு எதற்காக வெளிச்சந்தையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய வேண்டும்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.