×

“விஜய்க்கு களத்தில் உள்ள நிலவரம் தெரியவே இல்லை! யாரை ஊழல் சக்தி என்கிறார்?”- எடப்பாடி பழனிசாமி

 

விஜய் மக்களை பார்ப்பதும் இல்லை தொலைக்காட்சியை பார்த்தும் தெரிந்து கொள்வதில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக-வின் இரண்டாம் கட்ட தேர்தல்  வாக்குறுதிகளை அக்கட்சி பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 4) அறிவித்தார்.  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. விஜய் மக்களை பார்ப்பதும் இல்லை தொலைக்காட்சியை பார்த்தும் தெரிந்து கொள்வதில்லை. விஜய்க்கு களத்தில் உள்ள நிலவரம் தெரியவே இல்லை. அதிமுக தலைமையில் தான் கூட்டணி என அமித்ஷாவே சொல்லிவிட்டார், இது கூட தெரியாதவராக விஜய் உள்ளார். வீட்டை விட்டு வெளியே வந்தால் விஜய்க்கு நாட்டு நடப்பு தெரியும். தேர்தல் களத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் பலம் வாய்ந்தாக இருக்கிறது.

ஊழல் வழக்கில் சிறை சென்றவர் செங்கோட்டையன், அவரை அருகில் வைத்துக்கொண்டு ஊழல் குறித்து விஜய் பேசுகிறார். எங்களை ஊழல் சக்தி எனக் கூற வழியே இல்லை. ஜெயலலிதாவை ரோல் மாடல் என அவர் ஏற்றுக்கொண்டார். ஜெயலலிதாவை ரோல் மாடல் என்றால், விஜய் யாரை ஊழல் சக்தி என்கிறார்?மக்களை சந்திக்க வெளியே வராதவர் விஜய். கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், 
72 நாட்கள் கழித்தே வெளியே வந்தார்” எனக் குற்றம்சாட்டினார்.