×

தவெக ஒரு கலப்பட கட்சி- எடப்பாடி பழனிசாமி

 

தவெக தூய்மையான கட்சியா? இல்லையா? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஊரக வேலைத் திட்டத்தில் 100 நாள் வேலை என்பதை திருத்தம் செய்து 125 நாட்களாக மத்திய அரசு அதிகரித்திருக்கிறது. முதலமைச்சருக்கு பாராட்ட மனமில்லாமல் அதிமுகவை குற்றஞ்சாட்டுகிறார்.  100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயரே நீடிக்க வேண்டும். ரயில் கட்டண உயர்வை பரிசீலித்து மத்திய அரசு குறைக்க வேண்டும். ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.5000 வழங்க நடவடிக்கை வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக வைத்த அதே கோரிக்கையைதான் அதிமுக மீண்டும் வைக்கிறது.  S.I.R-ல் என்ன குறைபாடு இருக்கின்றது? எதிர்க்க வேண்டும் என்ற நோக்கோடு முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கிறார். SIR பணிகள் மூலம் தமிழகத்தில் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கள்ள ஓட்டு போட முடியாது என்ற காரணத்தால்தான் திமுக SIRயை தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

தவெக தூய்மையான கட்சியா? இல்லையா? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். தவெக கலப்பட கட்சி என கே.பி.முனுசாமி கூறியது சரி. 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழு விரைவில் அறிவிக்கப்படும். மக்கள் விரோத திமுக அரசை அகற்ற விரும்பும் ஒத்த கருத்துடைய கட்சிகள் தேர்தல் நேரத்தில் எங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாம். தவெக தூய சக்தியா என்பதை மக்கள் தான் முடிவு செய்யவார்கள். அடுத்த கட்சியை பற்றி எங்களுக்கு என்ன?. அவர்கள் அவர்களுடைய கருத்தை சொல்கிறார்கள்” எனக் கூறினார்.